புதுடெல்லி, நவ. 10-
ஒரிசா மாநிலத்தை "ஒடிசா" என்ற பெயர் மாற்ற மசோதா, அம்மாநிலத்தில் பேசும் மொழியான ஒரியாவை "ஒடியா" என்ற பெயர் மாற்ற மசோதா ஆகிய 2 மாசோதாக்களை நேற்று உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த 2 மசோதாக்களும் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. 2008-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி ஒரிசா மாநில சட்டசபையில் பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment