Friday, November 12, 2010

3டி மொபைல்போனை அறிமுகப்படுத்தியது ஸ்பைஸ்






           நா‌ளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள் நிகழ்ந்து வரும் தொலைதொடர்பு துறையில், ஒவ்வொரு நிறவனங்களும் இந்த போட்டி உலகில் தங்களை முன்னிறுத்திக்கொள்ள புதுப்புது அறிமுகங்களை செய்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், 3டி மொபைல்போனை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது ஸ்பைஸ் மொபைல்ஸ். இதுகுறித்து, ஸ்பைல்ஸ் மொபைல்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 'வியூ டி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன், பயனாளர்களுக்கு முப்பரிமாண (3டி) கண்ணாடி இல்லாமலேயே, 3டி உருவத்தை உணரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மொபைல்போன் பயனாளர்கள் காண்பதற்கேற்ப 2டி மற்றும் 3டி என்று மாறும் தன்மையுடையது என்றும், இந்த மொபைலில் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் யாதெனில், 'ரிமோட் வொய்‌ட்'ஆகும், இதன்மூலம் இதன்மூலம், போன் பயன்பாட்டில் இல்லாதபோது, அதனுள் உள்ள விசயங்கள (டேட்டா) மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம், ரிமோட் மூலம் அழிக்கலாம் என்பதே ஆகும். இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட இந்த 3டி மொபைல்போனின் விலை ரூ. 4,299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment